தமிழ்ச்சங்கம்
என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன.
சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த
ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும்
கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல்
என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய
காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை
கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும்.
தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள்
போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக்
குறிப்பிடுகின்றன.
இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே
குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை
இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம்
என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை
உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது
மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1902 முதல் 'செந்தமிழ்' என்னும் மாத இதழை வெளியிட்டுவருகிறது. பாண்டித்துரைத் தேவர் இதனைத் தோற்றுவித்தார். இது நான்காம் தமிழ்ச்சங்கம் எனப் போற்றப்படுகிறது.
மதுரைச் செந்தமிழ்க் கல்லூரி இச்சங்கத்தின் கீழ் இயங்குகிறது. தமிழ்,
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு
அரும்பணி ஆற்றிவருகிறது.[1] திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய நூல்களின் பெருமையே இந்தச் சங்கம் தோன்றுவதற்கு உந்து மையமாக விளங்கியது.[2]
கு. கதிரவேற்பிள்ளையால் 1800 பக்கங்களில் 63900 சொற்களில், மூன்று பாகங்கள் கொண்ட தமிழ்ச் சொல் அகராதியை தமிழ்ச் சங்க அகராதி எனும் பெயரால் மறு பதிப்பாக, முதல் பாகம் 1910 இலும், இரண்டாம் பாகம் 1912 இலும், மூன்றாம் பாகம் 1923 இலும் மதுரைத் தமிழ் சங்கத்தாரால் அச்சிடப்பட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக