ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டுத்தன்மைக்கான முழுமையான தீர்வு Complete solution for infertility of men and women
பெண் மலட்டுத்தன்மை நீங்க வழிகள் வயதுக்கு வரும் பெண் பிள்ளைகள் நல்லெண்ணெய், உளுந்தங்களி, லேகிய வகைகள் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். இதுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது. மாதவிலக்கு 28 நாட்ளுக்கு ஒருமுறை வரவேண்டும். இதில் ஒருநாள் மாறுபடலாம். மாதவிலக்கு 3 நாட்கள் இருக்க வேண்டும். வயிற்றில் வலி இருக்கக்கூடாது. அப்படி வலிஇருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படும். அதை தடுக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ரத்தப்போக்கு பிரச்சனை வந்தாலும் அதையும் உடனே சரிப்படுத்த வேண்டும். பெண்கள் மலட்டுத்தன்மையை போக்க வழி : மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உணவு வகையிலும் கவனம் செலுத்தவும். கசப்பு, துவர்ப்பு, இயற்கையான இனிப்பு… இந்த மூன்றையும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குறையாது பார்த்துக்கொள்ளவும். அதாவது பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கேரட், பீட்ரூட்டை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை, தூதுவளை, இப்படி ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவுடன் காலை அல்லது மதியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாதுளம் பழம்,