முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டுத்தன்மை மற்றும் குழந்தையின்மைக்கான முழுமையான தீர்வு Men and women are the perfect solution for infertility and childhood

குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்!



“பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாமல் போனால் பிறகுதான் மருத்துவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புவரை திருமணமான அடுத்த மாதமே குழந்தை இல்லை என மருத்துவமனைகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். இன்று என்ன டிரெண்ட் தெரியுமா? திருமணத்துக்கு முன்னரே மருத்துவரைச் சந்தித்து, தனக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா?
திருமணத்துக்குப் பிறகு குழந்தை
பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். ஆனாலும் இன்னொரு பிரிவினர் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்...” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.
குழந்தையின்மைப் பிரச்னையைத் தவிர்க்க அவசியமான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறர் டாக்டர் ப்ரியா...

பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

‘பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். பிசிஓடி பிரச்னை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.
உடற்பயிற்சியில் உறுதிகொள்ளுங்கள்!
என்னதான் வசதிகள் இருந்தாலும், ஆரோக்கியத்துக்காக சில விஷயங்களில் உடலை வருத்திக்கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டைவிட்டு இறங்கினாலே வண்டி, எல்லாவற்றுக்கும் உதவியாள் போன்றவற்றை மறந்து, உடற்பயிற்சிகளை தினசரிக் கடமையாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்!

சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம். 30 பிளஸ்ஸில் திருமணம் ... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.
கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்!
7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.
இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்னைகளைத் தரலாம்.
எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும்.
14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
நன்றி விகடன்.



குழந்தையின்மை
புதிதாக மணம் புரிந்த தம்பதிகள், உடலுறவு தொடர்ந்து வைத்துக் கொண்டாலும், ஒருவருடம் கழிந்தும் மனைவி கருத்தரிக்காமல் போனால், அது குழந்தை பெறுவதில் கோளாறு இருப்பதை உணர்த்தும். கோளாறு ஆணினாலும் இருக்கலாம் இல்லை பெண்ணினாலும் இருக்கலாம். குழந்தையின்மை என்பது ஆண்மை / பெண்மை குறைவல்ல. இந்த குறைகள் உடலுறவு முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவது. குழந்தையின்மை உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்காமலிருப்பது.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ‘வெறி பிடித்தால்’ போல, ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.


காரணங்கள் – ஆண்
• ஆயுர்வேதத்தின்படி பொதுவான காரணங்கள் – விந்தணுக்களில் குறைபாடு, விந்து செல்லும் குழாய்கள் பாதிக்கப்படுவது, பிறப்புறுப்புகள் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவிக்குறைகள் (விரைகள் இறங்காதது மற்றும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை), வியாதிகள் போன்றவை. விரைகளில் அசாதரணமாக Varicose நரம்புகள் புடைத்திருப்பதும் ஒரு கோளாறு.
• விந்தணுக்கள் குறைந்திருப்பது (Oli gospermia) அல்லது இல்லாமலே போவது (azoospermia). தவிர விந்தணுக்கள் நகரும் சக்தி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விந்து பெண்ணின் சினைப்பை (Ovaries) யை அடைந்து முட்டைகளுடன் சேரமுடியாது. சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.
• விந்தணுவின் அடர்த்தி குறைவு. விந்தணுக்கள் நகர முடியாமல் போதல்,
நகரும் தரம் – ஒரு மி.லி. உள்ள விந்துவில் 50 அல்லது 60 சதவிகித விந்தணுக்கள் விரைவாக முன்னோக்கி நகர வேண்டும். 30% விந்தணுக்கள் சரியான உருவத்தை, வடிவத்தை கொண்டிருக்க வேண்டும். தவிர கொள்ளளவு (Volume) 2 மி.லிக்கு மேல் இருக்க வேண்டும். ப்ரூக்டோஸ் (Fructose) சரியான அளவில் இருப்பது அவசியம். Fructose இல்லாவிட்டால் விரைகளில் உள்ள சிறு குழாய்கள் (Seminal Vescicles) பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.


• தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.
• ஹார்மோன் கோளாறுகள் – தைராயிடு, அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள் விந்து உற்பத்தியை குறைக்கும். சில பிறவிக்கோளாறுகளினால் Sex chromosomes…. விந்து உற்பத்தியை குறைக்கலாம்.
• விரைகளில் வரும் Mumps…. மருந்துகள் (Steroid) போன்றவையும் விந்து உற்பத்திக்கு தடைபோடும்.
• விரைகளில் ஏற்படும் பிறவிக் கோளாறு – விந்து குழாய்கள் அடைத்துக் கொள்வது போன்றவை.
• விந்து ஒரே பாதையில், திசையில் செல்லாமல் வேறுபக்கம் பாய்வது.
• வயது.
• சுக்கிலவக (Prostate) கிருமித் தொற்று.
• லாகிரி வஸ்துகளின் உபயோகம்.
• உடல் பருமன்.
• சைக்கிள் ஓட்டுவது இதனால் பிறப்புறுக்கள் அடிபடுகின்றன.
• சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதல்.
• எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகள்.
• ஊட்டச்சத்துக் குறைவு.
• ஸ்ட்ரெஸ்.
பரிசோதனைகள்
ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.
காரணங்கள் – பெண்
பெண்களின் குறைபாடுகளில் பரவலானது, சினைப்பையிலிருந்து (Ovaries) முட்டைகள், மாதம் ஒரு முறை வெளிவராதது. ஒவரிகள் Progesterone என்ற ஹார்மோனை சுரக்காமல் போவது. இந்த ஹார்மோன் கருப்பப்பை சுவர்களை, கருவினை வரவேற்க பலப்படுத்தும். இது பிட்யூட்டரி சுரப்பிகளை ஊக்குவிக்கும் மூளை செயல்படாமல் போவதால் சுரக்காமல் போகும்.
இதர காரணங்கள்
• கர்ப்பப்பையின் பிறவிக் கோளாறுகள். கர்ப்பப்பையின் ‘வாய்’ அடைத்துக் கொள்வது, தொற்று நோய் பாதிப்பு போன்றவை.
• சோகை
• உடல்பருமன்
• தைராயிடு, அட்ரீனலின் சுரப்பி கோளாறுகள்
• நீரிழிவு
• மனக்கோளாறுகள்
• மாதவிடாய் சரிவர ஏற்படாதது.
• Fallopian Tube ல் அடைப்பு.
• கர்ப்பப்பை கட்டிகள்.
• Cervix ல் உண்டாகும் சளி (Mucus)
இது Ovulation சமயங்களில் குறைந்து நீர்த்து விடும். நீர்த்து விடுவதால்
விந்தணு, வழுக்கி, முன்னோக்கி நகர்ந்து, கர்ப்பப்பையை சேருவது சுலபமாகும். இந்த சளி குறைந்து வழி விடாவிட்டால் விந்தணுவின் நகரும் இயக்கம் நின்று விடும். தவிர இந்த சளியில் விந்தணுக்களை கொல்லும் எதிர் அணுக்கள் (Anti – bodies) ஏற்பட்டால் இன்னும் பிரச்சனையாகும். கர்ப்பம் நிகழாது.
• பெண்ணின் வயது (வயது அதிகமாக அதிகமாக முட்டையின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து கொண்டே வருகின்றது).
• உறவின் எண்ணிக்கை – பொதுவாக அதிக உறவு கொண்டால் கருவுற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிலும் கருவுறும் வாய்ப்பு உள்ள காலங்களில் குறைந்தது வாரம் 3 முறை உறவு கொள்வது அவசியம்.


• குழந்தையின்மையின் காலம் – நீண்ட நாட்கள் குழந்தையே இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தானாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
• பெண் கருவுற வாய்ப்புள்ள நாட்களில் குறைந்தது ஒரு வாரத்திற்கு 3 முறை முயற்சித்தும் கருவுற இயலாத தம்பதியினர் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். கருவுறுவதற்கு ஒரு திடமான முறையோ அல்லது உறவு கொள்ளும் விதமோ கிடையாது. சிலருக்கு ஒரு முறை உறவு கொண்டாலே கரு உண்டாகி விடும். சிலருக்கு பல முறை பல வருடங்கள் முயற்சித்தாலும் நடைபெறாமல் போகும். இதற்கென ஒரு முறையோ அல்லது விதமோ கிடையாது. இது அவருடைய அதிர்ஷ்டம் என்று கூட கூறலாம்.


பரிசோதனைகள்
Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால் Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும்.
குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக
நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.
உணவு: நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் எடை
உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
உடற்பயிற்சி
முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
புகைப்பழக்கம்: புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.
குடிப்பழக்கம்: போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
பிற மருந்துகள்: ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.
உறவு: கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.
கருவுறும் காலம்
மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.
உறவு முறை: ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு முறையுள்ளது. உதாரணமாக பன்றிகள் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. கரடிகள் உறவு கொள்ளும் பொழுது விந்தணுக்கள் சிந்தி விடாமல் இருக்கும் விதத்தில் சிறப்பு அம்சம் கொண்டவை. ஆனால், மனிதனுக்கு அப்படியரு முறை எதுவும் கிடையாது.
எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும்.
உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.
பிற சாதனங்கள்
எளிதாக உறவு கொள்ள ஜெல் வகையோ அல்லது அதிக விறைப்புத் தன்மை அடைய ஸ்ப்ரேயையோ உபயோகிப்பதை ஆண்கள் தவிர்த்தல் அவசியம். ஏனெனில் இவ்வகை அலோபதி மருந்துகள் விந்தணுக்களை செயல் இழக்கச் செய்து விடும். இயற்கையான முறையில் உறவு கொள்ளுதல் அவசியம். பொதுவாக இக்காலத்தில் கருவுறும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது இதற்கு பல காரணங்கள் உள்ளன அவை.
• பெண்கள் வயது அதிகமான பின்னரே திருமணம் புரிந்து கொள்வது.
• பாலுறவினால் ஏற்படும் தொற்று நோய்கள்.
• குறைந்து கொண்டே வரும் ஆண்களின் விந்தணுக்களின் தரம்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் உணவு முறை அழற்சி, மன அழுத்தம்
போன்ற பல பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
குழந்தையின்மைக்கு மருத்துவம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பொறுமையாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அலோபதி முறையாக இருந்தாலும் ஆயுர்வேத முறையாக இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலமான 28 நாட்களில் 5 நாட்களே கருவுற வாய்ப்புகள் உள்ள காலமாதலால் குறைந்தது ஒரு வருடமாவது மருத்துவம் செய்து பின்னரே அந்த மருந்துகள் வேலை செய்கின்றதா? இல்லையா? என்ற முடிவிற்கு வர முடியும்.
மீண்டும், மீண்டும் மருத்துவர்களையும் மருத்துவ முறையையும் ஓரிரு மாதங்களில் மாற்றிக் கொண்டே வந்தால் மருந்துகளும் மருத்துவமும் எந்த பயனையும் தராது வயது மட்டுமே ஏறிக்கொண்டே போகும்.
எனவே, மருத்துவம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது அதே மருந்துகளையும் மருத்துவத்தையும் செய்து கொள்வது அவசியம் அப்பொழுது தான் நற்பலனைப் பெற இயலும். குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் குழந்தையின்மைக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. அவை, முற்றிலும் மூலிகைகளாலானவை பாதுகாப்பானவை பக்க விளைவுகளற்றவை எனவே, அவற்றை தொடர்ந்து உபயோகித்து பயனடையலாம்.


ஆயுர்வேதமும் குழந்தையின்மையும்
முதலில் உடற்கோளாறுகளை சரி செய்வது அதன் பிறகு கருத்தரிக்க சிகிச்சைகளை ஆரம்பிப்பது என்பது ஆயுர்வேத சித்தாந்தம், கருத்தரித்தவுடன், கரு சரிவர வளர பிரத்யேகமான கவனம் செலுத்தப்படும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
• ஸ்நேகப்னம் – மூலிகைநெய், எண்ணெய் இவை குறைந்த அளவில், அதிகாலையில் கொடுக்கப்படும். மெதுவாக மருந்து அளவுகள் ஏற்றப்படும்.
• வீதனம் – மூலிகை செறிந்த நீராவிகுளியல் செய்விக்கப்படும்.
• விரேசனம் – உடலின் கழிவு, நச்சுப் பொருட்கள் நீங்க மருந்து கொடுக்கப்படும்.
• கஷாய வஸ்த்தி – பிரத்யேக மூலிகை ‘எனிமா’ கொடுக்கப்படும். இதனால் பிறவி உறுப்பு சிறுநீரக பாதை சுத்தமாகும்.
• ஸ்நேக வஸ்தி:- மருந்துள்ள எண்ணையும் மேற்கண்ட பலனுக்காக கொடுக்கப்படும்.
• ஒத்தார வஸ்தி:- கர்ப்பப்பை, யோனி சுத்தமாக ஸ்பெஷல் நெய் கொடுக்கப்படும்.
சிறிது ஒய்வுக்குப் பிறகு ‘வாஜீகரணம்’ ஆரம்பமாகும். இது புத்துயிர்
ஊட்டி, ஆண்மையை பெருக வைக்கும். அபாரமான சிகிச்சை. விந்துவின் விந்தணு எண்ணிக்கை பெருகி, நகரும் சக்தி அதிகரிக்கும். நோயாளியின் வீரியம், பலம் அதிகமாகும்.
ஆயுர்வேதத்தில் குழந்தையின்மை குறைய போக்க உன்னதமான அற்புதமான மூலிகைகள் உள்ளன. ஆண், பெண் இருவருக்கும் சரியான தேவையான சிகிச்சை முறைகள் கிடைக்கும். குழந்தை வேண்டுமென்றால் ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் போதும்.
ஆயுர்வேத மூலிகைகள் தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.
சில மருந்துகள்
1. அஸ்வகந்தாரிஷ்டம்
2. மகரத்வஜம்
பெண்களின் மலட்டுத்தன்மை
இதன் காரணங்கள்
1. சினை முட்டையே உற்பத்தியாகமல் இருக்கலாம்
2. கர்பப்பை பின்னோக்கி வளைந்திருக்கலாம் (Retroverted Uterus)
3. ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு
4. கர்பப்பையில் Fibroid கட்டிகள், சிஸ்ட்டுகள் (Cyst)
5. கருப்பையின் கழுத்து வீங்குதல், கருப்பையின் ஜவ்வு போன்ற கோழை விந்துவை ஏற்று கொள்ளாமல் ‘எதிரி’ யாக பாவிப்பது.
ஆயுர்வேத மூலிகைகள், மருந்துகள்
1. ஆலமரப்பட்டை
2. பாலக்ருதம் என்ற தயாரிப்பு
3. வங்க பஸ்பம்
4. சிலாஜித்
5. பலா (Sida rhombifoloa)
6. அஸ்வகந்தா
உணவு நியமம்
வெங்காயசாறு, அதனுடன் தேன்/நெய், நெல்லிப்பொடி, பால், வெண்ணை, புரதம் செறிந்த உணவுகள் (மீன், மாமிசம், முட்டை) இவைகள் வலுவை உண்டாக்கும்.
யோகாசனங்கள் சிறந்த பலனை தரும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!

Every town’s our home town; every man, our kinsman; good and evil happen not because of others; pain and relief happen on their own; dying isn’t something unknown; neither do we rejoice that life is a joy, nor in disgust, do we call it a misery; since we know from words of the wise ‘Our precious lives follow their destined course, like rafts following the course of a mighty river clattering over rocks after a downpour from lightning slashed skies’, we are not impressed by the mighty; more importantly, we do not scorn the lowly. யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண் துளி தலை இ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. This poem by Kanian Poonkundranar (A...

ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் Aala Poraan Tamizhan song lyrics

படம்: மெர்சல் வரிகள்: விவேக் குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகள்:- கோரஸ்: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..   பாடல் :  ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான் இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: ஹே அன்பைக் ...

உலக தமிழ் சங்கம் World Tamil Association

தமிழ்ச்சங்கம்    என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன. சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது   மதுரைத் தமிழ்ச் சங...