எளிய முறை அழகு குறிப்பு முகம் பொலிவு பெற pengal alaku kurippu, pengal azhaku, mooligai maruththuvam,
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்
.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்
அழகு குறிப்புகள் 1000
அழகு குறிப்புகள் பாட்டி வைத்தியம்
அழகு கலை குறிப்புகள்
கடலை மாவு அழகு குறிப்பு
முக அழகுக் குறிப்புகள்
மருதாணி அழகு குறிப்புகள்
எளிய அழகுக் குறிப்புகள்
அதிமதுரம் அழகு குறிப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக