முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகப்பரு மறைய இயற்கை மருந்து,Pimple Treatment in Tamil

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!


டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதனால் அந்த தழும்புகளால் அழகு பாழாகிறது என்று பலர் வருத்தப்படுவதுண்டு. அதனால் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்தி, அதனைப் போக்குவதற்கு முயற்சிப்பதும் உண்டு. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ஆகவே அவ்வாறு க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிப்பதை விட, இயற்கைப் பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழும்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலிவோடு காணப்படும். இப்போது அந்த பருக்களையும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்ப்போமா!!!
\










 சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.






சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.







சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்







ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும். 










கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.








கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.







எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவுங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண்ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பளபளப்பான முகம் உங்களுடையதாகும்.





சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் 








ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.





எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறிது சிறிதாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.



ஊட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுடன் பளபளப்பதைக் காண்பீர்கள்.










உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழியில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகும். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.





ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.








சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.








தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வதால், தேவையற்ற சதைகள் குறைந்து, எடை குறைவதுடன், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.





கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளையும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.





வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.





களைந்துவிட்டு, முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக் அப் சாதனங்களைத் தவிர்த்திடுங்கள்.






முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால், அவை பெருகும். அதோடு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல்களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.


சிறிது சமையல் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது தண்ணீரை சேர்த்து பசை போல கலக்கவும். இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள். பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழும்புகளும் மறையக்கூடும்.



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன்னாள் முதலமைச்சர் செல்வி:ஜெயலலிதா அவர்களின் கம்பீரமான பேச்சு X Chief ...

  X Chief Minister Ms. Jayalalithaa's majestic speech Jayalalithaa Jayaram Biography - About family, political life The Tamil Nadu Chief Minister, Ms J. Jayalalithaa Jayalalitha first movie Jayalalitha death date Tamil Nadu CM List Tamil Nadu chief minister List Jayalalitha husband name Jayalalitha mother Sandhya Jayalalitha age History of Jayalalithaa History of Jayalalithaa's mother Jayalalitha age 2020 History of MGR Jayalalithaa Jayalalitha first movie Biography of Jayalalithaa Jayalalithaa's story Jayalalithaa record ஜெயலலிதா வரலாறு ஜெயலலிதா அம்மா வரலாறு Jayalalitha age 2020 எம்ஜிஆர் ஜெயலலிதா வரலாறு Jayalalitha first movie ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு ஜெயலலிதா கதை ஜெயலலிதா சாதனை ஜெயலலிதா அம்மா வரலாறு

ஆட்டிசம் என்பது Medical advice Dr. Asha's clear explanation

Dedicated to every autism mom all over world who sacrificed their life for kids♥️🥰❤️💕 UmaJai thank you 🙏 dear ♥️💕 What is autism #Autistic​ #meaning​ in tamil #Autism​ #symptoms​ #Autism​ in #tamil​ #Autism​ #meaning​ Autism spectrum disorder What are the 3 main symptoms of autism? What are the 3 main symptoms of autism? What is autism exactly? What is the main cause of autism? What is an autistic person like? Abnormal Body Posturing or Facial Expressions Abnormal Tone of Voice Avoidance of Eye Contact or Poor Eye Contact Behavioral Disturbances Deficits in Language Comprehension Delay in Learning to Speak Flat or Monotonous Speech Inappropriate Social Interaction Intense Focus on One Topic Lack of Empathy Lack of Understanding Social Cues Learning Disability or Difficulty Not Engaging in Play With Peers Preoccupation With Specific Topics Problems With Two-Way Conversation Repeating Words or Phrases Repetitive Movements Self-Abusive Behaviors Sleep Disturbances S...

Type 1&2 கோவக்காய் சர்க்கரை நோயை குணமாக்கும் Medical advice Dr. Asha's ...