சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்.
அத்தகையவர்களைப் பார்த்தால், பொறாமை ஏற்படுவதோடு, மனதில் இருக்கும் தன்னம்பிக்கை குறையும். ஏனெனில் இவ்வுலகில் அகம் அழகாக இருப்பதை பலர் பார்ப்பதில்லை. பெரும்பாலானோர் புற அழகை வைத்து தான் ஒருவரை எடை போடுகிறார்கள். ஆகவே அக அழகுடன், புற அழகையும் மனதில் கொண்டு புற அழகை சரியாக பராமரித்து வந்தால், எதையும் தைரியமாக மேற்கொள்வதோடு, வாழ்க்கையில் முன்னேற முடியும். எப்படியெனில், இந்த உலகத்தில் பலர் அழகு குறைவாக உள்ளது என்று நினைத்து தம்மை தாமே குறைவாக எடை போடுகிறார்கள். இதனால் தன்னம்பிக்கை குறைந்து, முன்னேற்றமானது தடைப்படுகிறது. ஆகவே அழகாக இருக்க வேண்டுமெனில், சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்தாலே போதும். மேலும் நல்ல உணவுகளை சாப்பிடுவதும் சரும அழகை மேம்படுத்தும். இப்போது சருமத்தை நன்கு அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில செயல்கள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முறையாக பின்பற்றி வந்தால், அழகாக மாறுவது உறுதி.
தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்.
தினமும் குறைந்தது 2 பெரிய டம்ளர் அளவில் பழங்களால் ஆன ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய அனைத்து
சத்துக்களும் கிடைத்து, சருமம் அழகாக வெளிப்படும். முக்கியமாக கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்
தினமும் சரியாக தூங்குவதில்லையா? அப்படியெனில் அது முக அழகை கெடுக்கும். எனவே தவறாமல் தினமும் 8 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்தால், சருமம் அழகாக இருக்கும்.
எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். எனவே சாலட் சாப்பிடும் போது சிறிது எலுமிச்சை சாறு அல்லது 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.
வால்நட்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே இதனை அன்றாட உணவில் சேர்த்து வர, சருமம் அழகாகும். மேலும் வால்நட் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், முதுமை தள்ளிப் போகும்.
சரும அழகை கூட்டுவதற்கு ஒரு சிறந்த வழி என்றால் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவது தான். இல்லையெனில், ஆரஞ்சு பழ தோலை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடலாம்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் காலையில் ஒரு கப் க்ரீன் டீயை குடித்து வந்தால், பொலிவான சருமம் கிடைக்கும். மேலும் க்ரீன் டீ போட்ட பின்னர், அந்த இலையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாகும்.
இந்த அழகான பழத்தை உணவில் சேர்த்தால், அது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, சருமத்தின் அழகை அதிகரிக்கும்.
மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சால்மன் மீனை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அதனை சாப்பிட்டால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து, முகத்தின் அழகு கூடும்.
முட்டையில் புரோட்டீன் மட்டும் நிறைந்திருப்பதில்லை. அதில் சருமத்திற்கு அழகைக் கொடுக்கும் சில வைட்டமின்களும் நிறைந்துள்ளன. எனவே முட்டையை உணவில் அதிகம் சேர்ப்பதோடு, முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதுளையில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு அரைத்து தடவினாலோ, பாதிப்படைந்த சரும செல்கள் குணமாகி, சருமத்தின் அழகு அதிகரிக்கும்.
பயறுகளில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், பாதிப்படைந்த சரும செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, முதுமை தோற்றம் தடைபடும். ஆகவே அழகாக இருக்க வேண்டுமெனில், அதிகப்படியான பயறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அவகேடோவில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால், இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மேலும் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன், பொலிவாக காணப்படும்.
சர்க்கரை அல்லது உப்பு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
தினமும் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தி, 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் வறட்சியின்றி அழகாக காணப்படும்.
நல்ல பழங்கள் மற்றும் காய்கறிகளான ஃபேஷியலை மாதத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடன், ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
எப்போதும் வெளியே செல்லும் போது, நல்ல தரமான சன் ஸ்கிரீன் லோசனை பயன்படுத்த வேண்டும். இதனால் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கலாம்.
சூரியனிடமிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. அவை கண்களைச் சுற்ற கருவளையங்களை ஏற்படுத்திவிடும். மேலும் சரும சுருக்கங்களையும் உண்டாக்கிவிடும். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது மறக்காமல், சன் க்ளாஸ் அணிந்து செல்வது நல்லது.
கருத்துகள்
கருத்துரையிடுக