சென்னை இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையாைனது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு. பொதுத் தகவல்கள் பரப்பளவு -174 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை - 70 லட்சம். உயரம் - கடல் மட்டம். மழை அளவு - 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி). பேசப்படும் மொழிகள்- தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம். வரலாறு: முற்காலத்தில் சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்த சென்னை நகரம் தற்போது மாநகரமாக வளர்ந்துள்ளது. சோழர், பாண்டியர், பல்லவர் காலத்திலிருந்து சிறந்த துறைமுக நகராக விளங்கி வருகிறது. வாசனைப் பொருட்களுக்கும், துணி வகைகளுக்கும், முத்துக்களுக்கும் சிறந்து விளங்கிய தமிழகத்துடன் கிரேக்கர்கள், சீனர்கள், ரோமானியர்கள் போன்ற வெளிநாட்டினர...